Sunday, January 14, 2018

How Lanka

மஹிந்தவை முடக்கும் 5 விடயங்கள் மைத்திரியின் கைகளில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் நடைபெற்ற பாரிய மோசடி மற்றும், அரச சொத்துகளை முறைகேடாக பயன்படுத்தியமை போன்றவற்றிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அறிக்கைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த அறிக்கைளின் அடிப்படையில், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள 5 குற்றச்சாட்டுகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கைகள் விபரம் வருமாறு,

கடந்த அரசாங்ககாலத்தில் நீர்கொழும்பு பகுதியில் இடம்பெற்ற அபிவிருத்தி வேலைத்திட்டத்தின்போது அரசாங்க பணம் கையாளப்பட்டமை தொடர்பான முன்னாள் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு.

மஹியங்கனை பிரதேசசபையில் கடைத்தொகுதி பிரித்துக் கொடுக்கப்பட்ட ஒப்பந்தக் கோரலில் நடந்த ஊழல் தொடர்பான ஊவா மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அநுர விதானகமகே மற்றும் அவர் தரப்பினருக்கு எதிரான குற்றச்சாட்டு.

சுயாதீன தொலைக்காட்சி சேவையில் இடம்பெற்ற ஊழல் தொடர்பாக அதன் முன்னாள் தலைவர் அநுர சிரிவர்தன உட்பட மேலும் 5 பேர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு.

ரக்னா லங்கா பாதுகாப்பு தனியார் நிறுவனம் ஊடாக நடைபெற்ற ஊழல் தொடர்பாக முன்னாள் மேஜர் ஜெனரல் கே.பி. ஏகொடவெல மற்றும் இதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு.

ஹலாவத்தை தெங்கு பயிர்ச்செய்கை சபையின் மூலமாக அரசாங்க பணம் முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார மற்மு இதனுடன் தொடர்புபட்ட மேலும் ஒன்பது நபர்கள் தொடர்பிலான குற்றச்சாட்டு.

மேற்குறித்த 5 குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இவை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது