Monday, January 15, 2018

How Lanka

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற புகையிரத்தில் தீ

கொழும்பில் இருந்து மதியம் யாழ் நோக்கி சென்ற குளிரூட்டப்பட்ட புகையிரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து யாழ் நோக்கிப்புறப்பட்ட புகையிரத இயந்திர பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சாவகச்சேரி மீசாலை பகுதியில் புகையிரதம் வந்து கொண்டிருந்த போதே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


அதனை அடுத்து புகையிரதம் நிறுத்தப்பட்டு , யாழ்.மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயிணை அணைத்த பின்னர் புகையிரதம் யாழ். புகையிரத நிலையத்திற்கு புகையிரத வந்து சேர்ந்தது இயந்திர கோளாறு காரணமாகவே இவ் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.