Monday, January 15, 2018

How Lanka

பட்டம் கட்டுவதில் உலகை மிஞ்சிய வல்வெட்டிதுறை மக்கள்

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் பட்டம் ஏற்றும் போட்டி நேற்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

பார்ப்பவர்களை பிரம்மிக்க வைக்கும் வகையிலும், ஆச்சரியப்பட வைக்கும் வகையிலும் சுமார் 60 பட்டங்கள் ஏற்றப்பட்டன.


இவற்றில் பறக்கும் மேடையில் பொம்மலாட்டம் பட்டம் முதலிடத்தை பெற்றுக்கொண்டது.

அந்தப் பட்டத்தை வடிவமைத்த ம.பிரசாந்த்க்கு 15 ஆயிரம் ரூபா பணமும் ஒரு பவுண் தங்க நாணயமும் வழங்கப்பட்டது.


அன்னப்படகு பட்டம் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.

அதனை வடிவமைந்த ம.ஆரோக் என்பவருக்கு அரை பவுண் தங்க நாணயமும், 10 ஆயிரம் ரூபா பணப் பரிசும் வழங்கப்பட்டது.

மூன்றாம் இடத்தை உருமாறும் ரான்ஸ்போமர் பெற்றுக்கொண்டது.

அதனை வடிவமைத்த வெ.ராஜேந்திரனுக்கு துவிசக்கர வண்டி ஒன்றும், 5 ஆயிரம் ரூபாய் பணமும் பரிசாக வழங்கப்பட்டது.

ஆனால் நேற்று உதயசூரியன் கடற்கரையில் பறக்கவிடப்பட்ட அனைத்து பட்டங்களுமே பார்வையாளர்களை வியக்கவைத்தன.

கற்பனைக்கு எட்டாத வகையில் இந்த இளைஞர்கள் பட்டங்களை வடிவமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.