Sunday, January 21, 2018

How Lanka

நாடாளுமன்றத்தை கலைக்கவோ பிரதமரை நீக்கவோ ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை - அஜித் பீ. பெரேரா

அரசியலமைப்புச் சட்டத்தின் 19ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய நாடாளுமன்றத்தை கலைக்கவோ பிரதமரை நீக்கவோ ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

பாணந்துறை - கெசல்வத்தை பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

19ஆவது திருத்தச் சட்டத்தின் செல்லுப்படி தன்மை ஜனாதிபதி அண்மையில் பரிட்சித்து பார்த்தார். அவருக்கு பதில் கிடைத்தது.

ஜனாதிபதி 6 ஆண்டுகளுக்கு தெரிவு செய்யப்பட்டார். எனினும் அதனை அவரது விருப்பதுடன் 5 ஆண்டுகளாக குறைத்தோம்.

19ஆவது திருத்தச்சட்டம் அமுலில் இருப்பதால், ஜனாதிபதியாக நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது. பிரதமரையும் நீக்க முடியாது.

பிரதமரின் இணக்கத்துடனேயே அவரை நீக்க முடியும். இதனால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கே நாட்டின் அதிகார பலம் உள்ளது.

பழைய முறை இருந்திருந்தால், எப்போது நாடாளுமன்றம் கலைக்கப்படுமோ என்ற அச்சத்தில் இருந்திருப்போம். ஜனாதிபதி கடுமையான கருத்துக்களை வெளியிட்டாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.