­
ஜெயலலிதாவை தீர்த்து கட்டியது சசிகலா குடும்பம் தான் - பொன்னையன் - How Lanka

Saturday, January 20, 2018

How Lanka

ஜெயலலிதாவை தீர்த்து கட்டியது சசிகலா குடும்பம் தான் - பொன்னையன்

சசிகலா குடும்பம் தான் ஜெயலலிதாவிற்கு ஸ்டீராய்டுகள் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக அவரை தீர்த்து கட்டியது என பொன்னையன் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக் கூட்டத்தில் பொன்னையன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, ஜெயலலிதாவுக்கு மெல்ல கொல்லும் ஸ்டீராய்டு எனும் விஷத்தை சசிகலா குடும்பம் தான் கொடுத்தது.

இதனால் அவரது சர்க்கரை அளவு 500, 560 என எகிறியது, நோய் தொற்றும் ஏற்பட்டது, ஸ்டீராய்டுகள் என்பது மெல்ல கொல்லும் விஷமாகும்.

இதை தொடர்ந்து உட்கொள்ள கூடாது என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் சசிகலா குடும்பத்தினர் வேண்டுமென்றே இதை கொடுத்து ஜெயலலிதாவை தீர்த்து கட்டிவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஸ்டீராய்டுகள் வழங்கப்பட்டது குறித்து ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்த வேண்டுமென்றும், இதன் மூலம் பல உண்மைகள் வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளார்.


Help