ஐ.நாவின் பொருளாதாரா தடைகள் காரணமாக மிகவும் நெருக்கடிகுள்ளாகியிருக்கும் வடகொரியா சொகுசு ரிசார்ட் ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளது.
வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. உலகநாடுகளின் எதிர்ப்புகளை மீறி தொடர்ந்து இது போன்ற செயலில் ஈடுபட்டு வருவதால், அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று ஐ.நா-வில் அமெரிக்கா ஒரு தீர்மானம் கொண்டு வந்தது.
அந்த தீர்மானமும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதால், வடகொரியா மீது பல்வேறு விதமான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன.
இதற்கு எல்லாம் மூலக் காரணமாக இருப்பது அமெரிக்கா என்பதால், அமெரிக்கா மீது கடும் கோபத்தில் வடகொரியா உள்ளது.
இந்நிலையில் ஐ.நா-வின் இந்த கடுமையான பொருளாதார தடைகள் காரணமாக வடகொரியா மிகவும் பொருளாதார ரீதியில் மிகவும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் இதை சரிகட்டும் விதமாக வடகொரியாவின் Kangwon மாகாணத்தில் சுற்றுலாப் பயணிகளை சுண்டி இழுக்கும் வகையில், மிகவும் அழகான சொகுசு ரிசார்ட் கட்ட வடகொரியா அரசு முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதில், ஐ.நா-வின் பொருளாதாரதடைகளை உடைத்தெறியும் வகையில் நாட்டில் Kangwon பகுதியில் சொகுசு ரிசார்ட் கட்டப்படவுள்ளது.
இதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவார்கள், அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து, இந்த பொருளாதார தடைகளில் இருந்து நாம் மீள முடியும்.
அதுமட்டுமின்றி இது நாட்டின் பல்வேறு சுற்றுலா தலங்களை இணைப்பதற்கான மிக சிறந்த இடமாக இது இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த சொகுசு ரிசார்ட் Kangwon மாகாணத்தில் ஏவுகணை சோதனை செய்யப்பட்ட இடத்தில் கட்ட முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.