Wednesday, January 3, 2018

How Lanka

வட பிராந்திய இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கின்றது

வட பிராந்திய இலங்கை போக்குவரத்து சபையினர் இன்று மூன்றாவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா புதிய பஸ் நிலையத்திலிருந்து சேவையை முன்னெடுப்பதற்கு, வட பிராந்திய இலங்கை போக்குவரத்து சபையினர் தொடர்ந்தும் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

புதிய பஸ் நிலையத்திலிருந்து சேவையை முன்னெடுக்குமாறு முதலமைச்சர் பணித்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதேவேளை, தமது வர்த்தக நடவடிக்கை பாதிக்கப்படுவதாகத் தெரிவித்து பழைய பஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடியுள்ளனர்.


வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக கறுப்புக் கொடிகளை பறக்கவிட்டு வர்த்தகர்கள் தமது எதிர்ப்பை வௌிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் வவுனியாவில் உள்ள ஏனைய விற்பனை நிலையங்களையும் மூடி பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவளிக்குமாறு வர்த்தகர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, வவுனியா தனியார் பஸ் உரிமையாளர்கள் புதிய பஸ் நிலையத்திலிருந்து தமது சேவையை முன்னெடுத்து வருகின்றனர்.