கிளிநொச்சியில் சற்று முன்னர் கோர விபத்து! யாழ். இளைஞர்கள் நால்வர் சம்பவ இடத்திலேயே பலி
கிளிநொச்சி - மாங்குளம் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே நால்வர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து மாங்குளம்- கொக்காவில் ஏ9 வீதியில் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ்ரக வாகனம் ஒன்று, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலம் மீட்கப்பட்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.