Sunday, January 14, 2018

How Lanka

இந்தியா- தென் ஆப்பிரிக்கா இரண்டாவது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா சிறப்பான ஆட்டம்


இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து விளையாடி வருகிறது.

இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் அந்த அணி முன்னிலை வகிக்கிறது, இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று செஞ்சூரியனில் தொடங்கியுள்ளது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

அந்த அணியின் தொடக்க வீரர்களாக டீன் எல்கரும், எய்டன் மர்க்ரமும் களமிறங்கினார்கள்.



அபாரமாக விளையாடி வரும் மர்க்ரம் 89 பந்துகளில் 51 ஓட்டங்கள் எடுத்துள்ளார், மறுமுனையில் விளையாடும் டீன் எல்கர் 73 பந்துகளில் 26 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

மார்கம், டுபிளசிஸ் , அம்லா ஆகியோரின் சிறப்பாட்டத்தால் அனைத்து விக்கெட்களையும் இழந்து 335 ஓட்டங்களை முதலில் இனிங்ஸில் தென்னாபிரிக்க அணி பெற்றுள்ளது.


பந்து வீச்சில் அஸ்வின் 4 விக்கெட்களையும் இஷசாந் சர்மா 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.


பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி சற்று முன்வரை 2 விக்கெட்களை இழந்து 29 ஓட்டங்களை பெற்றுள்ளது.