Monday, January 8, 2018

How Lanka

தென் ஆப்பிரிக்காவை மிரட்டிய புவனேஷ்


தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு 208 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது.



இதில் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா அணி 286 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 209 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி சார்பில் ஹார்திக் பாண்ட்யா 93 ஓட்டங்கள் குவித்தார்.

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய தென் ஆப்பிரிக்கா அணி, இந்திய அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது.

குறிப்பாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், தென் ஆப்பிரிக்கா அணி துடுப்பாட்ட வீரர்களை மிரட்டினார்.

இதனால் தென் ஆப்பிரிக்கா அணியில் ஏய்டன் மார்கம் 34, எல்கர் 25, டிவில்லியர்ஸ் 35 என எடுத்து அடுத்தடுத்து வெளியேறியதால், அந்தணி 130 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 208 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று நான்காவது நாள் ஆட்டம், இன்னும் நாளை ஒருநாள் ஆட்டம் உள்ளதால், இந்திய அணி நிதானமாக ஆடி வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.

தென் ஆப்பிரிக்கா அணியை மிரட்டிய புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.