இலங்கையின் 70ஆவது சுதந்திர தினம் நேற்று காலி முகத்திடலில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த பிரித்தானிய அரச குடும்பத்தினர் சார்பில் பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத் மற்றும் எடின்பரோ கோமன் இளவரசர் பிலிப் ஆகியோரின் இளைய புதல்வரான இளவரசர் எட்வேர்ட் மற்றும் மனைவி இளவரசி சோபி ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.
இதில் இலங்கையின் முப்படைகளினதும் சாகசங்களை கண்டு வியந்து போனதுடன், இராணுவத்தினரின் பாரசூட் சாகசங்களைப் பார்த்து பிரித்தானிய அரச குடும்பத்தினர் உட்பட அங்கு வந்திருந்தவர்கள் அனைவரும் ஆச்சரியமடைந்ததை காணக்கூடியதாக இருந்தது.
பாரசூட் சாகசத்தின் போது இலங்கை வான் பரப்பை ஆச்சரியத்துடன் பார்த்ததுடன், இளவரசி சோபி இதைக்கண்டு இளவரசரிடம் ஏதோ கூறியதையும் இதன்போது அவதானிக்கக்கூடியதாக இருந்தது.