Sunday, February 4, 2018

How Lanka

தாய்வானில் ஒரே நாளில் நான்கு முறை நிலநடுக்கம்

தாய்வானில் ஒரே நாளில் அடுத்தடுத்து நான்கு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் காரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளனர் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் முதலில் 5.2 இருந்து 5.5 ரிக்டர் அளவிளான நான்கு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாகவும், இறுதியாக 6.1 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
துறைமுக நகரமான ஹுவாலியனில் இருந்து வடக்கு திசையில் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில், கடலுக்கடியில் எட்டு கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தையடுத்து தைபே உள்ளிட்ட பகுதிகளில் கட்டடங்கள் குலுங்கின. மக்கள் அச்சத்தில் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.