சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள சசிகலா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனுப்பிய தூதை நிராகரித்து விட்டார் என செய்திகள் வெளிவந்துள்ளது.
பாஜகவின் அழுத்தம் காரணமாகவும், ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் இணைந்த கூட்டணி அணி தினகரனை ஒதுக்கி வைத்துள்ளது.
ஆனால், தினகரனோ எடப்பாடி அரசுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறார். அவரின் பக்கம் 18 எம்.எல்.ஏக்கள் மற்றும் சில எம்.பி.க்கள் உள்ளனர். மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்.
ஊடகங்களுக்கும் பேட்டி அளிக்கும் போதும், மக்கள் முன்பு பேசும் போதும் தொடர்ந்து எடப்பாடி அரசுக்கு எதிராக பேசுகிறார். இதனால், எடப்பாடி அரசு மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தி தனக்கு சாதகமாக அமையும் என கணக்குப் போட்டு காய்களை நகர்த்தி வருகிறார்.
அந்நிலையில், 2017ம் ஆண்டிலேயே, முக்கிய அமைச்சர் மூலம் சிறையில் உள்ள சசிகலாவிற்கு எடப்பாடி ஒரு கடிதம் அனுப்பினாராம். அதில், தினகரன் தங்களுக்கு தரும் நெருக்கடியை பட்டியலிட்ட எடப்பாடி, தினகரனை தயவு செய்து ஒதுங்கியிருக்க சொல்லுங்கள். உங்கள் தலைமையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டிருந்தாராம்.
ஆனால், எடப்பாடி மீது கடுமையான கோபத்தில் இருந்த சசிகலா அந்த கடிதத்தை பிரித்துக்கூட பார்க்கவில்லையாம். எனவே, அந்த சமாதான முயற்சி தோல்வியில் முடிந்தது.
ஆர்.கே.நகர் வெற்றிக்கு பின் எடப்பாடி அரசை டிடிவி தினகரன் ஏகத்துக்கும் விமர்சித்து வருகிறார். தற்போது சுற்றுப்பயணத்தை துவங்கியுள்ள தினகரன், செல்லும் இடமெங்கும் எடப்பாடி அரசுக்கு எதிராகவே பேசி வருகிறார். இன்னும் ஒரு மாதத்தில் ஆட்சி கவிழும் என அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
அதாவது எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும். அதை வைத்து எடப்பாடி ஆட்சியை கவிழ்க்க அவர் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
இவற்றையெல்லாம் கூர்ந்து கவனித்து வரும் எடப்பாடி, சசிகலாவிற்கு மீண்டும் ஒரு தூது படலத்தை நிகழ்த்தியுள்ளார். அதில், உங்களுக்கு எதிராக நாங்கள் எங்கேயும் பேசுவதில்லை.
தினகரனை மட்டுமே விமர்சிக்கிறோம். அவரின் செயல்பாடுகளால் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. அவரை ஒதுக்கி வையுங்கள். ஜெயலலிதாவின் காலத்தில் உங்களுக்கும், உங்கள் உறவினர்களுக்கு கிடைத்த அனைத்து மரியாதைகளும் அப்படியே கிடைக்கும்” எனக் கூறினாராம்.
ஆனால், பிடிகொடுக்காத சசிகலா, தினகரனை விட்டுக் கொடுக்க முடியாது என உறுதியாக கூறிவிட்டதோடு, கட்சி மற்றும் ஆட்சியை எங்கள் பக்கம் கொண்டு வருவது எப்படி என எங்களுக்கு தெரியும் எனக் கூறிவிட்டாராம்.
இதனால், எடப்பாடி தரப்பு சற்று அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.