Friday, February 16, 2018

How Lanka

தென்னாபிரிக்க அணி படு சொதப்பல் இறுதி போட்டியிலும் இந்தியா வெற்றி

இந்தியா-தென் அப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான ஆறாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி, பீல்டிங் தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு மார்கிராம், அம்லா ஆகியோர் துவக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

ஆம்லா 10 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும், மார்கிராம் 30 பந்தில் 24 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினர்.




கடந்த போட்டிகளில் சொதப்பிய டிவில்லியர்ஸ் இந்த போட்டியில் வானவேடிக்கை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 30 ஓட்டங்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.

டிவில்லியர்ஸ் வெளியேறிய பின்பு தென் ஆப்பிரிக்கா அணி திணற ஆரம்பித்தது. 4-வது வீரராக களம் இறங்கிய சோண்டோ மட்டும் தாக்குப்பிடித்து அரைசதம் அடித்தார்.

தொடர்ந்து விளையாடிய அவர் 74 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 54 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஒரு கட்டத்தில் 151 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு 8-வது விக்கெட்டுக்கு இணைந்த பெலுக்வாயோ-மோர்னே மோர்கல் ஜோடி தென் ஆப்பிரிககா அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இந்த ஜோடி 36 ஓட்டங்கள் சேர்த்ட்ப்ஹ நிலையில் 19 பந்தில் 2 சிக்சருடன் 20 ஓட்டங்கள் எடுத்து மோர்கல் ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.


இறுதியாக தென் ஆப்பிரிக்கா அணி 46.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ஓட்டங்கள் எடுத்தது.

இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக சேர்க்கப்பட்ட ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டும், பும்ரா மற்றும் சாஹல் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

அதன் பின் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக ஷிகர் தவான், ரோகித் சர்மா களமிறங்கினர். கடந்த போட்டியில் அதிரடியாக ஆடி சதமடித்த ரோகித் இந்த போட்டியில் 15 ஓட்டங்கள் எடுத்து வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.

இதைத் தொடர்ந்து மூன்றாவது வீரராக களமிறங்கிய கோஹ்லியுடன் தவான் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இருப்பினும் தவான் 18 ஓட்டங்களில் வெளியேறினார். அடுத்து வந்த ரகானே, கோஹ்லிக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுக்க, கடந்த போட்டியில் மந்தமான ஆட்டத்தை வெளிபடுத்திய இன்றைய போட்டியில்

கோஹ்லி தென் ஆப்பிரிக்கா அணியின் பந்து வீச்சை ஒரு கை பார்த்தார்.

இதனால் இந்திய அணியின் ரன் விகிதமும் சீரான விகிதத்தில் எகிறியது. சிறப்பாக விளையாடி வந்த கோஹ்லி தன்னுடைய 35-வது சதம் அடித்து அசத்தினார்.

இந்திய அணி 32.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 206 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணி சார்பில் கோஹ்லி 96 பந்தில் 129 ஓட்டங்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவருக்கு இணையாக ஆடிய ரகானே 50 பந்தில் 34 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 5-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.