சிட்டகாங்கில் நடைபெற்று வந்த இலங்கை, வங்கதேச அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ளது.
இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள், சிட்டகாங்கில் நடந்த முதல் டெஸ்டில் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வங்கதேசம், துடுப்பாட்டத்தை தெரிவு செய்து 513 ஓட்டங்கள் குவித்தது.
பின்னர், ஆடிய இலங்கை அணி குசால் மெண்டிஸ் (196), தனஞ்ஜெயா டி சில்வா (173), ரோசன் சில்வா (109) ஆகியோரின் சதத்தால், 9 விக்கெட் இழப்புக்கு 713 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இதனைத் தொடர்ந்து, 200 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில், வங்கதேசம் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. அந்த அணியில் தொடக்க வீரர்களான தமிம் இக்பால் 41 ஓட்டங்களும், கேயஸ் 19 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
முஷ்பிகுர் ரஹிம் 2 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 81 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. மொமினுல் ஹக் 18 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.
இந்நிலையில், இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. மொமினுல் ஹக்குடன் விக்கெட் கீப்பர் லித்தோன் தாஸ் இணைந்தார். இருவரும் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடினர். கடைசி நாள் ஆட்டம் சுழற்பந்து வீச்சுக்கு சாதமாக இருந்தது.
எனினும், மொமினுல் மற்றும் தாஸ் இருவரும் இலங்கையின் பந்துவீச்சை எதிர்த்து விளையாடினர். சிறப்பாக விளையாடிய மொமினுல், 154 பந்துகளில் சதம் அடித்தார்.
பின்னர், டி சில்வாவின் பந்துவீச்சில் கருணரத்னேவிடம் கேட்ச் கொடுத்து, 105 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில், அரைசதம் விளாசிய லித்தோன் தாஸ் 94 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.
இதனைத் தொடர்ந்து, 6வது விக்கெட்டுக்கு அணித் தலைவர் மகமுதுல்லாவும், மொசாடெக் ஹொசைனும் இணைந்தனர். இருவரும் அணியில் தோல்வியின் பாதையில் இருந்து மீட்டு, டிராவிற்கு கொண்டு சென்றனர்.
வங்கதேச அணி 100 ஓவர்களில், 5 விக்கெட் இழப்புக்கு 307 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, கடைசி நாள் ஆட்டம் முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. மகமதுல்லா 28 ஓட்டங்களுடனும், ஹொசைன் 8 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.
இலங்கை தரப்பில் ஹெராத் 2 விக்கெட்டுகளும், சந்தகன், டி சில்வா மற்றும் பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.