Monday, February 5, 2018

How Lanka

உள்ளூராட்சித் தேர்தலில் ஐதேக பெரும் வெற்றியைப் பெறும் - புலனாய்வு அறிக்கைகள்

உள்ளூராட்சித் தேர்தலில் ஐதேக பெரும் வெற்றியைப் பெறும் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 7 வரையான சபைகளிலேயே வெற்றி பெறும் என்றும் புலனாய்வு அறிக்கைகள் தெரிவிப்பதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் தொடர்பாக, பல்வேறு குழுக்களும், அரசியல் கட்சிகளும், கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன.

இந்த கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை, உள்ளூராட்சித் தேர்தலில் ஐதேகவே வெற்றியீட்டும் என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளன.

பல கருத்துக்கணிப்புகளில், மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மோசமான பின்னடைவு ஏற்படும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதனால், உள்ளூராட்சி சபைகளிலும், ஐதேக- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து கூட்டு ஆட்சியை அமைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தமுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில், ஐக்கிய தேசியக் கட்சி 225 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும் என்று புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி 40 ற்கும் அதிகமான சபைகளைக் கைப்பற்றும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் தமிழ், முஸ்லிம் கட்சிகள், 50ற்கும் அதிகமான சபைகளின் அதிகாரத்தைக் கைப்பற்றும்.ஜேவிபி ஒரு சபையில் கூட வெற்றி பெறாது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் 7இற்கும் குறைந்த சபைகளையே கைப்பற்ற முடியும் என்றும் அந்த புலனாய்வு அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, அஞ்சல் மூல வாக்களிப்பின் போது, முப்படையினர் பெரும்பாலும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கே வாக்களித்துள்ளனர் என்றும் புலனாய்வு அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

பொலிஸாரின் தபால் வாக்குகள் பெரும்பாலும், ஐக்கிய தேசியக் கட்சிக்கே அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.