துபாயில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் தனி விமானம் மூலம் மும்பை வந்தது.
துபாயில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க அங்கு சென்ற ஸ்ரீதேவி, குளியல் தொட்டியில் விழுந்து உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவரது உடல் துபாயில் இருந்து தனி விமானம் மூலம் மும்பை கொண்டுவரப்பட்டுள்ளது. அவரது உடல் நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அந்தேரி மேற்கு செலிப்ரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் ஸ்ரீதேவி உடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்த முடியும்.
செலிப்ரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பிலிருந்து நாளை பிற்பகல் 2 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்படவுள்ளதாக, ஸ்ரீதேவியின் உறவினர்கள் தகவல் அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து மும்பையில் வில்லேபார்லே மயானத்தில் நாளை பிற்பகல் 3.30 மணியளவில் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. ஸ்ரீதேவி குடும்பத்தின் பாரம்பரிய முறைப்படி அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது. இதற்கிடையே ஸ்ரீதேவியின் உடல் மும்பை வந்துள்ளதால், அங்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளன