நடிகை ஸ்ரீதேவி, திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக, பா.ஜ.க, மூத்த தலைவர், சுப்பிரமணியன் சாமி, குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது குறித்து, செய்தியாளர்களிடம், சுப்பிரமணியன் சாமி கூறியதாவது:
ஸ்ரீதேவியின் உடலில், அதிக அளவிலான ஆல்கஹால் கலந்திருப்பதாக, பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அவர், எப்போதும், தன் உடல் நலனில் மிகுந்த அக்கறை செலுத்துபவர்; அளவுக்கு அதிகமாக குடிப்பவர் அல்ல, பின், எப்படி அவரது உடலில், அவ்வளவு ஆல்கஹால் சேர்ந்தது?
அவரை கட்டாயப்படுத்தி, குடிக்கச் செய்து, குளியல் அறை தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்திருக்கலாம்.
ஓட்டலில் இருந்த கண்காணிப்பு கமரா பதிவுகள் குறித்து, எந்த தகவலும் இல்லை.
என்னை பொறுத்தவரை, நிச்சயம் இது ஒரு கொலை.
ஸ்ரீதேவி மாரடைப்பால்தான் இறந்தார் என திடீரென மருத்துவர்கள் கூறியது ஏன்?
சினிமா நடிகைகளுக்கும் நிழலுலக தாதா, தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது கூட்டாளிகளுக்கு, இதில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.