பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் இன்று விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இன்று காலை 9 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெறும் என ஜனாதிபதி செயலக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று மாலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.
சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பதவி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் வழங்கப்படும் என பரவலாக பேசப்பட்டு வந்தன. எனினும் கடந்த அமைச்சரவை மாற்றம் மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் பொன்சேகா இலங்கையில் இருக்கவில்லை.
தனிப்பட்ட ரீதியில் இந்தோனேசியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பொன்சேகா, நேற்று முன்தினம் நாடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.