நாவல - வெலி வீதியில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த பாலியல் விடுதி ஒன்றை வெலிக்கடை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.
நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையில் 8 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 30 வயதுக்கு குறைந்தவர்கள் என வெலிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடுதியின் முகாமையாளரும் இதில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கும் குறித்த பாலியல் விடுதியால் தமது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட முகாமையாளர் மற்றும் 8 பெண்களையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.