Monday, February 26, 2018

How Lanka

மதுவுக்கு அடிமையான ஸ்ரீதேவி குளியலறை தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார் - புதிய தகவல்

ஸ்ரீதேவி துபாய் ஹொட்டல் அறையின் குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் நடந்த குடும்ப உறுப்பினரின் திருமணத்துக்கு சென்ற போது உயிரிழந்தார்.

மாரடைப்பால் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரின் உடற்கூறாய்வு மற்றும் தடயவியல் அறிக்கைகளில் ஸ்ரீதேவி மரணம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, குளியலறையில் உள்ள தொட்டியில் இருந்த தண்ணீரில் மூழ்கியதால் ஸ்ரீதேவி மரணம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஸ்ரீதேவி மரணத்தில் சதிச் செயல்கள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை எனவும், ஸ்ரீதேவி ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருப்பதும் உடற்கூறாய்வு சோதனையில் தெரியவந்துள்ளது.

இரவு 10 மணியளவில் குளியலறைக்கு சென்ற ஸ்ரீதேவி, குடிபோதையில் இருந்ததால் தடுமாறி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்துள்ளார்.

எழுந்திருக்க முடியாததால் மூழ்கி உயிரிழந்துள்ளார், சுமார் 15 நிமிடங்கள் கழித்தே போனி கபூர் கதவை உடைத்து பார்த்த போது சடலமாக மீட்கப்பட்டார்.

மாரடைப்பால் இறந்ததாக கருதப்பட்ட நிலையில் ஸ்ரீதேவி மதுபோதையில் குளியலறையில் தவறி விழுந்து இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் பொருட்டு ஐக்கிய அமீரகத்தின் துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் காலமானதாக முதலில் தகவல் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியது.

ஆனால் உடற்கூறு சோதனையில் அவரது உடலில் மதுவின் அம்சம் அதிகம் இருந்துள்ளதாகவும், தண்ணீரில் மூழ்கி இறந்திருக்க வாய்ப்பு உள்ளது எனவும் தெரியவந்தது.

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் குளியலறையில் உள்ள குளியல் தொட்டியில் தவறி விழுந்து உயிர் இழந்துள்ளதாக தடயவியல் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

தமது உடல் மற்றும் தோற்றம் குறித்து அதீத அக்கறை கொண்ட ஸ்ரீதேவி, யோகா, டயட் என கட்டுக் கோப்பாகவே இருந்துள்ளார்.

ஆனால் அவரால் மது அருந்தும் பழக்கத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை என தெரியவந்துள்ளது.

அதிக மது போதையில் இருந்தவரால் குளியலறையில் இருந்து வெளிவர முடியாமல் போயுள்ளது.

மட்டுமின்றி குளியலறை தொட்டியானது ஆழமானதும் அல்ல. நிதானம் இழக்கும் மட்டும் மது அருந்தியதால் மட்டுமே ஸ்ரீதேவியால், தொட்டியில் தவறி விழுந்தும் மீண்டு வர முடியாமல் போனதாக கூறப்படுகிறது.

மது அருந்தியதாலையே அவரால் தொட்டியில் இருந்து எழ முடியாமல் உயிருக்கு போராடி இறந்திருக்கிறார் என அவரது நலம்விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.