Monday, February 26, 2018

How Lanka

காணமல் போனவர்களின் போராட்ட களத்தில் பௌத்த துறவிகள்

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சர்வமத வழிபாட்டு ஊர்வலம் மேற்கொள்ளும் குழு இன்று கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்துள்ளது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் 372 நாட்களாக தமது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டு தருமாறு கோரி அவர்களது உறவினர்களான தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அவர்களை குறித்த குழுவினர் இன்று பகல் சந்தித்து வழிபாட்டினை முன்னெடுத்துள்ளனர்.

ஜப்பான், ஐரோப்பா, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்தும் வருகை தந்த பௌத்த துறவிகள் குறித்த மக்களை சந்தித்தனர்.


உலக அமைதி பணியில் “நிப்பொன்சன் மியொஹொஜி” ஜப்பான் புத்த துறவிகளே இன்று மக்களை சந்தித்து பேசியுள்ளதுடன், விசேட வழிபாட்டினையும் முன்னெடுத்துள்ளனர்.


1984ஆம் ஆண்டு குறித்த அமைப்பினர் இலங்கைக்கு வருகை தந்து பிரார்த்தனை யாத்திரை முன்னெடுத்துள்ளதாக அந்த அமைப்பினர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளனர்.