Thursday, March 29, 2018

How Lanka

கல்முனை வலயத்தில் 103 மாணவர்களுக்கு 9 ஏ

கல்முனை வலயத்தில் 103 மாணவர்களுக்கு 9 ஏ தர சித்தி கிடைத்துள்ளது. குறிப்பாக கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் அதிகமான மாணவர்கள் ஏ தர சித்தி பெற்றுள்ளார்கள்.

கல்விப் பொதுத்தர சாதாரணதரப் பரீட்சை முடிவுகள் நேற்று வெளியாகியிருந்தது. இதில் கல்முனை கல்வி வலயத்தில் 103 மாணவர்கள் சகல பாடத்திலிலும் ஏ தர சித்தி பெற்றுள்ளார்கள்.

கல்முனை முஸ்லிம் கோட்டத்தில் 40 மாணவர்களும், கல்முனை தமிழ் கோட்டத்தில் 31மாணவர்களும், காரைதீவு கோட்டத்தில் 07 மாணவர்களும் ,நிந்தவூர் கோட்டத்தில் 12மாணவர்களும், சாய்ந்தமருது கோட்டத்தில் 13 மாணவர்களும் 9ஏ தர சித்தி பெற்றுள்ளனர்.

கல்முனை கார்மேல் பற்றிமா பாடசாலையில் 26 மாணவர்களும் கல்முனை மஹ்மூத் மகளிர்கல்லூரியில் 25 மாணவர்களும் 9ஏ தர சித்தி பெற்றுள்ளனர் .

கல்முனை வலயத்தில் அதிகமான மாணவர்கள் 9 ஏ தர சித்திகளைப் பெற்ற பாடசாலையாக கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை திகழ்கிறது.

கல்முனை பற்றிமாவில் 26 மாணவர் 9ஏ தர சித்திகளையும், 20 மாணவர் 8ஏ, பி தர சித்திகளையும் பெற்றுள்ளதுடன், பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.