Thursday, March 29, 2018

How Lanka

செவ்வாய் கிரகத்தில் கூட்டமாக நகரும் உயிரினங்கள்

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில், ஆயிரக்கணக்கான உயிரினங்கள் மொத்தமாக மேய்வது போன்ற புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? உயிரினங்கள் அங்கு வாழ இயலுமா? என்ற ஆராய்ச்சி நீண்ட காலமாக நடந்து வருகின்றது.

இந்த ஆராய்ச்சிக்காக ‘Curiosity Rover' என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு நாசா அனுப்பி வைத்தது. இந்த விண்கலத்தில் Mastcam எனும் கமெரா, அங்குள்ள காட்சிகளை படம் பிடிப்பதற்காக பொருத்தப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, Rover விண்கலம் செவ்வாய் கிரக நிலப்பரப்பில் உள்ள காட்சிகளை படம் பிடித்து அனுப்பி வருகிறது.


இந்நிலையில், சமீபத்தில் இந்த விண்கலம் அனுப்பியுள்ள படத்தில் செவ்வாய் கிரக மேற்பரப்பில், ஆயிரக்கணக்கான உயிரினங்கள் மொத்தமாக மேய்வது போன்ற ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது.

இது குறித்து சதி கோட்பாட்டாளர் நீல் எவன்ஸ் கூறுகையில், ‘இது செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஆதாரமாகும்.

இது செவ்வாய் கிரகத்தில் சுற்றுச்சூழல் ஆற்றலை வளர்க்கும் ஒரு நம்பிக்கையாகும் என நான் நம்புகிறேன். இந்த படத்தை ஒரு மணிநேரத்திற்கும் மேலாக ஆராய்ந்தேன்.

பூமியின் இடங்களில் பறவைகள் பார்வைக் காட்சிகளுடன் அதை ஒப்பிடும்போது, அது வட துருவத்திற்கு அடுத்ததாக இருக்கிறது. இந்த படங்கள் அனைத்தும் குறைந்த Resolution கொண்டதாகும்.

இருந்தாலும் இதில் நீங்கள் தெளிவான நீர் கோடுகளை பார்க்க முடியும். ஏரிகள், தாவரங்கள் அல்லது சில வகையான வாழ்க்கை வடிவங்கள், நீர் ஆதாரத்தின் மீது வெளிப்படும் விதமாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.