இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி 3 நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.
இந்த போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று முதல் 18-ந் தேதி வரை நடக்கிறது.
இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தி அணி தவானின் சிறப்பாட்டத்தினால் ஓட்டங்களை பெற்றது. சிறப்பாக ஆடிய தவான் 49 பந்துகளில் 90 ஓட்டங்களை குவித்தார்.
பின்னர் 175 ஓட்டங்களை இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் குசல் பெரேரா இந்திய பந்துவீச்சை விளாசிதள்ளினார். 5 ஓவர்களில் இலங்கை அணி 70 ஓட்டங்களை தொட்டது. 37 பந்துகளில் 66 ஓட்டங்களை விளாசினார் குசல் பெரேரா.
இறுதிநேரத்தில் திசர பெரேராவும் தன் பங்கிற்கு அதிரடி காட்ட 9 பந்துகள் மீத மிருக்க 5 விக்கெட்களால் இந்திய அணியை வீழ்தியது இலங்கை அணி.