செயற்பாட்டு ரீதியாக மிகவும் புரிந்துணர்வுடன் இனவாதத்திற்கு தேவையான சூழலை உருவாக்கும் குழுக்கள் இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இனவாதம் என்பது உடனடியாக ஏற்படும் ஒன்றென நாங்கள் நினைக்கவில்லை. அதற்கான சூழலை உருவாக்கும் குழுக்கள் இருக்கின்றன.
அரசியல் அறியாத புரிந்துணர்வு இல்லாமல் இனவாத பொறிக்குள் சிக்கும் குழுக்களும் உள்ளன. நாட்டின் இரண்டு பிரதான அரசியல் தரப்பினருக்கும் இந்த இனவாதம் தேவைப்படுகிறது.
பொருளாதார மந்த நிலைமை, ஆட்சியின் மந்த நிலைமை மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் காணப்படும் மந்த போக்கு என்பன காரணமாக தமக்கு எதிராக வரும் எதிர்ப்பினை வேறுபக்கம் திசைத்திருப்ப இந்த இனவாத நிலைமையானது அரசாங்கத்திற்கு சாதமானதாக அமையும்.
அரச எதிர்ப்பை கட்டியெழுப்ப வேண்டிய சந்தர்ப்பத்தில், சிங்கள மக்களை முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் முஸ்லிம் மக்களை சிங்கள மக்களுக்கு எதிராகவும் தூண்டி விடுவது அரசாங்க்திற்கு சாதகமானதாக அமையும்.
சிங்கள, தமிழ், முஸ்லிம் விவசாயிகள் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மூன்று இனங்களை சேர்ந்த இளைஞர், யுவதிகள் தமது கல்விக்கு ஏற்ற தொழில் இல்லாமல் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அனைத்து இன மக்களும் சிரமங்களுக்கு உள்ளாகி இருக்கும் நேரத்தில் அரசாங்கத்திற்கு எதிராக அணித்திரள வேண்டிய சந்தர்ப்பத்தில் இனவாத்தை நோக்கி மக்கள் திருப்பட்டுள்ளனர்.
அரசாங்கம் மட்டுமல்ல, தோல்வியடைந்த அரசியல் அணி மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற இனவாதத்தை பயன்படுத்தி வருகிறது.
இதன் காரணமாவே அண்மையில் பேருந்து ஒன்றில் நடந்த குண்டு வெடிப்பை காரணம் காட்டி மீண்டும் விடுதலைப் புலிகள் எழுச்சி பெற்றுள்ளதாக தோல்வியடைந்த அரசியல் அணி அறிக்கைகளை வெளியிட்டது.
கடந்த தேர்தல் சமயத்தில் மீண்டும் ஈழம் உருவாக போகிறது என்று கூறி இனவாதத்தை பரப்பினர். தோல்வியடைந்த இந்த அரசியல் அணியினரால், நாட்டிற்கு சிறந்த ஜனநாயகத்தை கொண்டு வருகிறோம், பொருளாதாரத்தை மேம்படுத்துகிறோம் என்று கூறி மக்களை கவர முடியவில்லை.
இதனால், அவர்கள் இனவாதத்தை தூண்டி வருகின்றனர்.அரசாங்கம் அதிகாரத்தை உறுதிப்படுத்தவும் தோல்வியடைந்த அணியினர் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றவும் இனவாதத்தை பரப்பி வருகின்றனர்.
இந்த இனவாத பூதத்தை போத்தலில் இருந்து வெளியில் எடுப்பது போல், மீண்டும் எளிதாக போத்தலுக்குள் அடைக்க முடியாது எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.