இலங்கையில் தற்போது நடந்து வரும் இனவாத வன்முறைகள் குறித்து ஐக்கிய நாடுகளின் இலங்கை அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளதுடன் இந்த வன்முறைகளை வன்மையாக கண்டிப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
குற்றவாளிகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் வன்முறைகளில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வழமையான நிலைமையை மீண்டும் ஏற்படுத்த உரிய நடவடிக்கைளை துரிதமாக எடுக்குமாறும் ஐக்கிய நாடுகள் அமைப்பு, இலங்கை ஆட்சியாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் சட்டத்தை மதிக்குமாறும், மனித உரிமைகளை பாதுகாக்குமாறும், பாதுகாப்பு, தற்காப்பை உறுதிப்படுத்துமாறும் ஆட்சியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்வதாகவும் ஐக்கிய நாடுகள் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.