கடந்த 2016ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, பேஸ்புக்கில் உள்ள 50 மில்லியன் வாக்காளர்களின் தகவல்களை பிரித்தானியாவை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் திருடியதாக செய்தி வெளியானது.
டிரம்புக்கு ஆதரவாக, 'கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் தேர்தல் பணிகளை மேற்கொண்ட போது, சமூக வலைதளமான பேஸ்புக்கில் உள்ள ஐந்து கோடி பேரின் தகவல்களை திருடியுள்ளது.
'Psychographic Modeling Technique' தொழில்நுட்பத்தின் மூலம் குறித்த தகவல்கள் திருடப்பட்டதாகவும், இதனை டொனால்டு டிரம்ப் அரசியல் பிரச்சாரத்தின் போது பயன்படுத்திக் கொண்டதாகவும் குற்றம்சாட்டியது.
இந்த விவகாரத்தால், கேம்பிரிட்ஜ் அனாலிடிக் நிறுவனத்தின் தலைமை அலுவலர் அலெக்சாண்டர் நிக்ஸ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பயனாளர்களின் தகவல் திருடப்பட்டதை தான் ஒப்புக்கொள்வதாகவும், தவறில் இருந்து தான் பாடம் கற்றுக்கொள்ள முடியும் என்றும் இனிமேல் இப்படி ஒரு தவறு நடக்காது என பேஸ்புக் வாயிலாக தனது பயனாளர்களிடம் மார்க் தெரிவித்தார்.
இந்நிலையில், பிரித்தானியா நாளிதழ் ஒன்றின் வாயிலாக பிரித்தானிய நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
"" நடந்தது தவறுதான், உங்கள் தகவல்களை பாதுகாக்கும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது, அது எங்களால் முடியவில்லை என்றால் அதற்கு நாங்கள் தகுதியானவர்கள் இல்லை, மன்னித்துவிடுங்கள் ""