கிளிநொச்சியில் அரசியல் கைதி ஒருவரின் மனைவி உயிரிழந்திருந்தமை நேற்றைய தினம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.
இந்நிலையில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் மனைவி ஆனந்தசுதாகர் யோகராணியின் இறுதி கிரியைகள் நேற்றைய தினம் இடம்பெற்றன.
இதற்காக, சிறையில் இருந்து மூன்று மணிநேர கால அவகாசத்தில் ஆனந்தசுதாகரன் அழைத்துவரப்பட்டார், இதன்போது அவரை அழைத்து வந்த பொலிஸ் உத்தியோகத்தர் துக்கம் தாங்க முடியாமல் கண்ணீர் சிந்தியுள்ளார்.
அரசியல் கைதியான தனது கணவனின் விடுதலைக்காக காத்திருந்த மனைவி, சோகம் தாங்க முடியாமல் மன ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
மனைவியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக ஆயுள் தண்டனை கைதியான சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரன் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு, மீண்டும் பொலிஸாரால் சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டார்.