சுதந்திரக் கிண்ண முத்தரப்பு கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணிக்கு இலங்கையர்கள் பாரிய ஆதரவு ஒன்றை வழங்கியிருந்தனர்.
வங்கதேச அணிக்கெதிரான வெற்றிக்கு பின் இந்திய ரசிகரை, வங்கதேச ரசிகர் தூக்கிக் கொண்டு ஓடியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இலங்கையில் முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இத்தொடரில் இலங்கை அணியை இரண்டு முறை வீழ்த்தி நாகினி ஆட்டம் போட்ட வங்கதேசம் அணி, இந்திய அணியை சந்தித்தது.
ஓவராக ஆட்டம் போட்ட வங்கதேச அணியின் மீது இலங்கை ரசிகர்கள் கடும் கோபத்திலே இருந்தனர். அதை நேற்றைய போட்டியின் போது மைதானத்தில் காணமுடிந்தது.
இந்நிலையில் இந்த இறுதிப் போட்டியில் ஒரு கட்டத்தில் வங்கதேச அணி வெற்றி பெறும் நிலையில் இருந்தது.
அப்போது இந்திய அணி வீரரான தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி, கடைசி பந்தில் 5 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்ற போது, அற்புதமாக சிக்ஸர் அடித்து இந்திய அணிக்கு த்ரில் வெற்றியை தேடித்தந்தார்.
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் இந்திய வீரர்கள் மைதானத்தில் வலம் வந்தனர். அந்த நேரத்தின் போது இந்திய ரசிகர் ஒருவரை, இலங்கை ரசிகர் தூக்கிக் கொண்டு ஓடி வந்தார்.
அவர்களது இருவரிடம் இரு நாட்டின் கொடி இருந்தது. இந்த உணர்ச்சி பூர்வமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய இலங்கை ரசிர்களுக்காக இந்திய அணியின் தலைவர் ரோஹித் தனது அணியுடன் இலங்கை அணியின் கொடியை தூக்கி கொண்டு மைதானம் முழுவதும் சென்றுள்ளார்.
இந்த காட்சி அனைவரினதும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
போட்டியின் ஆரம்பம் முதலே இந்திய அணிக்கு இலங்கையர்கள் முழுமையான ஆதரவை வழங்கினர்.
இதனால் இலங்கை ரசிகர்களுக்கு தங்களது நன்றியை வெளிப்படுத்தும் வகையில் ரோஹித் ஷர்மா இவ்வாறு செயற்பட்டுள்ளார்.
கிரிக்கெட் என்பது ஜென்டில்மென் விளையாட்டு என கூறப்படுவதனை இந்திய அணி உறுதி செய்துள்ளதாக பலர் கூறியுள்ளனர்.
அத்துடன் தனது நன்றி உரையிலும் இலங்கை ரசிர்களுக்கு தனது மனம் நிறைந்த நன்றியை ரோஹித் ஷர்மா வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொண்ட இந்திய அணி வெற்றி பெற்று சம்பியன் ஆனது.