Sunday, March 18, 2018

How Lanka

தினேஷ் கார்த்திக் கடைசி பந்தில் சிக்ஸர் - வங்கதேச அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி

வங்கதேச அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணியின் தினேஷ் கார்த்திக் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றித் தேடித்தந்தார்.

இலங்கையில் நடைபெற்று வரும் நிதாஹாஸ் டி20 முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதின.

அதன் படி நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. வங்கதேச அணிக்கு துவக்க வீரர்களாக தமிம் இக்பால், லித்தோன் தாஸ் களமிறங்கினர்.

லித்தோன் தாஸ் 11 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் வெளியேற, அடுத்து வந்த சபீர் ரஹ்மான், தமிம் இக்பாலுடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

தமிம் இக்பால் 15 ஓட்டங்களிலும், அடுத்து வந்த சவுமியா சர்க்கர் 1 ஓட்டத்திலும், முஸ்தபிசுர் ரஹீம் 9 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து வெளியேறி வஙகதேச அணிக்கு அதிர்ச்சி அளித்தனர்.

இருந்த போதிலும் தனி ஒரு ஆளாக போராடியா சபீர் ரஹ்மான அரைசதம் அடித்து அசத்தினார்.

50 பந்துக்கு 77 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் சபீர் உடன் கட் பந்து வீச்சில் வெளியேற வங்கதேச அணி இறுதியாக 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்கள் எடுத்தது.


வங்கதேச அணி சார்பில் அதிகபட்சமாக சபீர் 77 ஓட்டங்களும், மகமதுல்லா 21 ஓட்டங்களும் எடுத்தனர்.

இந்திய அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் சஹால் 3 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் உடன்கட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அதன் பின் 167 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக ரோகித் சர்மா-ஷிகார் தவான் களமிறங்கினர்.

ரோகித் சர்மா ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2.4 ஓவருக்கு 32 ஓட்டங்கள் எடுத்திருந்த போது தவான் 10 ஓட்டங்களில் வெளியேறினார்.

அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா டக் அவுட்டாகி வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.

இதனால் இந்திய அணி 32 ஓட்டங்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின் வந்த ராகுல், ரோகித் சர்மாவுடன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணியின் எண்ணிக்கை சீராக உயர்ந்தது.



ராகுல்(24), மணீஷ் பாண்டே(28) அரைசதம் கடந்து சிறப்பான ஆட்டத்த வெளிப்படுத்திய ரோகித் சர்மா 56 ஓட்டங்களிலும் வெளியேறியதால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றியது.

ஆறாவது வீரராக களமிறங்கிய விஜய் சங்கர் கடைசி கட்டத்தில் சொதப்ப, இந்திய அணியிடம் இருந்த வெற்றி வங்கதேசம் பக்கம் சென்றது.

ஒரு கட்டத்தில் கடைசி இரண்டு ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 34 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அப்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், தமிழக வீரருமான தினேஷ் கார்த்திக் களமிறங்கினார்.

வந்த வேகத்தில் அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக் இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்ஸர், இரண்டு ஓட்டங்கள் என 22 ஓட்டங்கள் குவிக்க இந்திய அணிக்கு கடைசி ஒவரில் 12 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

அந்த ஓவரில் விஜய் சங்கர் பவுண்டரி அடித்து வெளியேறியதால், கடைசி பந்தில் அணியின் வெற்றிக்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
கடைசி பந்தை சந்தித்த தினேஷ் கார்த்திக் சிக்ஸர் பறக்க விட, இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது.