Sunday, March 18, 2018

How Lanka

நம்பிக்கையை காப்பாற்றிய தினேஷ் கார்த்திக் ரோகித் பெருமிதம்



தினேஷ் கார்த்திக் மீது நம்பிக்கை இருந்ததன் காரணமாகவே அவர் பின் வரிசையில் இறக்கப்பட்டதாக இந்திய அணியின் தலைவர் ரோகி சர்மாக கூறியுள்ளார். வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், தமிழக வீரருமான தினேஷ் கார்த்திக் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றித்தேடித் தந்தார்.

இப்படி போட்டி பரபரப்பாக போவதற்கு இன்னொரு காரணம், மற்றொரு தமிழக வீரரான விஜய் சங்கரை கூறலாம். ஏனெனில் போட்டியின் நெருக்கடியான கட்டத்தின் போது, அதாவது 17-வது ஓவரில் 4 நான்கு பந்துகளை வீணடித்தார். அதன் பின் 8 பந்துகளில் 29 ஓட்டங்கள் குவித்து தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டினார்.

இதனால் இவர்கள் இருவரையும் வைத்து நெட்டிசன்கள் போட்டி முடிந்த அடுத்த நொடியே இரவு நேரத்திலே மீம்ஸ்களை கிரியேட் செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அது வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி இந்த தொடரில் தமிழக வீரர்களான வாஷிங்டன் சுந்தர் தொடர் நாயகன் விருதை பெற்றார், தினேஷ் கார்த்திக் இந்த போட்டிக்காக ஆட்ட நாயகன் விருதை பெற்றனர். அதையும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

 மேலும் இப்போட்டியில் எப்போதும் வழக்காம தினேஷ் கார்த்திக் முன் வரிசையில் இறங்காமல், அவருக்கு பதிலாக விஜய் சங்கர் இறக்கப்பட்டார்.

இது ரசிகர்களுக்கு பெரிதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதற்கான காரணத்தை ரோகித் செய்தியாளர்களின் சந்திப்பின் போது கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், போட்டியின் போது 18 மற்றும் 20 ஓவரில் வங்கதேச அணியின் முஸ்தபிசுர் ரஹ்மான் பந்து வீசுவார் என்று தெரியும்.

அதனால் அந்த கட்டத்தில் ஒரு அனுபவம் வாய்ந்த வீரர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணினோம். அதன் காரணமாக விஜய் சங்கரை முன்னர் இறக்கினோம். நாங்கள் வைத்த நம்பிக்கையை தினேஷ் கார்த்திக் காப்பாற்றிவிட்டார் என்று ரோகித் கூறியுள்ளார்.