Saturday, April 21, 2018

How Lanka

தென்னிலைங்கையில் இருந்து கேப்பாப்புலவு சென்ற சிங்கள ஆசிரியர்களின் மனிதாபிமானம்

தென்னிலைங்கையில் இருந்து கேப்பாப்புலவு காணி மீட்பு போராட்ட இடத்திற்கு சென்ற அருட் சகோதரிகள் உள்ளிட்ட சிங்கள ஆசிரியர்கள் அங்கிருந்த சிறுவர்களுக்கு கல்வி கற்பிக்கும் நடவடிக்கையில் இன்று ஈடுபட்டுள்ளனர்.
இராணுவத்தினர் சுபீகரித்துள்ள தமது காணிகளை மீளக் கையளிக்குமாறு கோரி கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த கேப்பாப்புலவு நிலமீட்பு போராட்டம் 421 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

இந்த நிலையில் தொடர் போராட்டத்தில் பெற்றோர்கள் ஈடுபட்டுவருவதினால் சிறுவர்களின் கல்வி நிலை பாதிப்படைந்திருக்கின்றது.




இவ்வாறான சூழ்நிலையில் இன்று அங்கு சென்ற அருட் சகோதரிகள் உள்ளிட்ட சிங்கள ஆசிரியர்கள் சில நாட்கள் அங்கயே தங்கி நின்று பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு கல்வி கற்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.