தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகுவது தொடர்பில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு விரைவில் கூடி தீர்மானமொன்றை எடுக்கும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார்.
அவரின் வீட்டிற்கு இன்று சென்றிருந்த ஆதரவாளர்களை சந்தித்த போதே அவர் இதனைக் கூறினார்.
அமைச்சுப் பதவியில் இருந்து விலகியதன் பின்னர், கண்டி – ஹேவாஹெடயில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு
சென்ற எஸ்.பி. திசாநாயக்கவை அவரின் ஆதரவாளர்கள் வரவேற்றனர்.
இதன்போது எஸ்.பி. திசாநாயக்க பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்,
விரைவில் எமது கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தை கூட்டி, தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகுவது தொடர்பான பிரேரணையை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்போம். அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சியில் அமர்வதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். மக்கள் கூட்டமைப்பொன்றின் ஊடாக மக்கள் ஆணையைப் பெறுவதற்கும் எண்ணியுள்ளோம்.