சிரியா மீது அமெரிக்க கூட்டுப்படைகள் மேற்கொண்ட அதிரடி வான்வழி தாக்குதல் நடந்து சில மணி நேரங்களேயான நிலையில் அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதில், சிரியா ராணுவம் அத்துமீறி மீண்டும் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் தொடரும் என்றால், கடுமையான எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் Nikki Haley குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா இணைந்து மேற்கொண்ட குறித்த வான்வாழி தாக்குதலில் சிரியாவின் ரசாயன ஆயுத ஆலைகள் கொத்தாக சிதைக்கப்பட்டுள்ளதாகவும்,
சிரியா மீண்டும் அப்பாவி மக்கள் மீது ரசாயன தாக்குதல் நடத்தும் எனில் அது எதிர்விளைவுகளை சந்தித்தே தீரும் எனவும் Nikki Haley எச்சரிக்கை விடுத்தார்.
கூட்டுப்படைகளின் குறித்த தாக்குதலில் சிரியாவின் முக்கிய ரசாயன ஆலைகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்துள்ள அவர்,
எங்களது பொறுமையை சோதிக்க சிரியா இனி முயற்சி மேற்கொள்ளாது எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆனால், அமெரிக்க கூட்டுப்படைகளின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்யா,
இந்த தாக்குதல் எங்களை அச்சுறுத்தியுள்ளது, இதுபோன்ற நடவடிக்கைகள் விளைவுகளை ஏற்படுத்தாமல் போய்விடாது என்று நாங்கள் எச்சரிக்கிறோம் என காட்டமாக தெரிவித்துள்ளது.
சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் எதுவும் இல்லை எனவும், இதை பல முறை உலக நாடுகளுக்கு தெரியப்படுத்தி உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள ரஷ்யா,
ஈராக்கிலும் இன்னபிற நாடுகளிலும் அமெரிக்கா மேற்கொண்ட ரத்தவெறியாட்டம் போன்று சிரியாவில் ஆட்டம் போட ரஷ்யா ஒருபோதும் அனுமதிக்காது எனவும் தெரிவித்துள்ளது.