Wednesday, April 4, 2018

How Lanka

யாழ் ஹோட்டல்களில் சாப்பிடுவோரே மிகக்கவனமாக இருங்கள்

யாழ்ப்பாணத்தில் ஹோட்டல் ஒன்றில் உணவு பெற்றவருக்கு பேரதிர்ச்சி ஏற்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாண கடையொன்றில் வழங்கப்பட்ட உணவுக்குள் பெரிய மட்டத்தேள் ஒன்று இறந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

தீவக பகுதிக்கு கடமைக்கு சென்ற அரச அதிகாரி ஒருவர் வாங்கிய உணவிலேயே இந்த விஷத் தன்மை கொண்ட மட்டத்தேள் காணப்பட்டுள்ளது.


கடமைக்கு செல்லும் அரச உத்தியோகத்தர் வாங்கிய உணவுப்பொதியில் பெரிய விஷ மட்டத்தேள் ஒன்று சாம்பாரில் இருந்துள்ளது. இந்நிலையில் உணவை வாங்கிச் சென்றவர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

குறித்த உத்தியோகத்தர் இன்று காலை கடமைக்கு செல்லும் போது, யாழ் சத்திரச்சந்தியில் இயங்கும் ஹோட்டல் ஒன்றில் காலை உணவினை வாங்கியுள்ளார்.
அலுவலகத்திற்கு சென்றவர் உணவை உட்கொள்ள திறந்த போது, சாம்பாரில் தேள் ஒன்று இறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொதுச்சுகாதார பரிசோதகரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

குறித்த ஹோட்டலில் இதற்கு முன்னர் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதுடன், பல தடவைகள் உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.