Monday, April 9, 2018

How Lanka

வேலணை பிரதேசத்தின் கல்வித் தரத்தை மீண்டும் உயர்வடையச் செய்வோம் – தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி

 ஆற்றலற்றவர்களின் கைகளில் வடக்கு மாகாணசபை இருப்பதனால் வடக்கின் கல்வித்தரம் சில ஆண்டுகளாக வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலூடாக தீவகம் தெற்கு வேலணை பிரதேசத்தின் அதிகாரம் எமது கரங்களுக்கு கிடைத்துள்ளமையானது மீண்டும் இப்பகுதியின் கல்வித் தரத்தை மட்டுமல்லாது இதர அபிவிருத்திகளையும் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை இப்பிரதேச மக்கள் தேடிக் கொண்டுள்ளனர்.



என வேலணைப் பிரதேச சபையின் தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் குறித்த பிரதேசத்தின் நிர்வாகச் செயலாளருமான நமசிவாயம் கருணாகர குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அல்லைப்பிட்டி மெதடிஸ் பாலர் பாடசாலை விளையாட்டு நிகழ்வு இன்றையதினம் மாலை 3.30 மணியளவில் K.ஜெரோமியா அருள்ராஜா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் தெரிவிக்கையில்-

எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த காலத்தில் யுத்தம் நடைபெற்போதும் சரி யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னரான 2015 ஆம் ஆண்டு முற்பகுதிவரையான காலம்வரை அவர் தமிழ் மக்களின் குறிப்பாக வடக்கின் கல்வித்தரம் வீழ்ச்சியடைய ஒருபோதும் சந்தர்ப்பம் வழங்கியது கிடையாது.

எமது தலைவரே முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியத்தையும் நியமனங்களையும் உறுதிசெய்து கொடுத்து முன்பள்ளி சிறார்களின் கல்வித்ரத்தை மேலோங்கச் செய்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அத்துடன் வடக்கிலுள்ள அதிகளாவான முன்பள்ளிகளுக்கான சிறுவர் விளையாட்டு பூங்ககாக்கள் மற்றும் முன்பள்ளிக் கட்டடங்களை நிர்மாணித்து கற்றல் உபகரணஙகள் முதல் தேவையான அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொடுத்து பின்தங்கிய பகுதியில் வாழும் சிறார்களினது கல்வித்தரங்களையும் ஒளிமயம்காண  சந்தர்ப்பத்தை வழங்கியிருந்தோம். ஆனாலும் துரதிஸ்டவசமாக அது தற்போது வடக்கை ஆழுபவர்களால் நடைபெறாதுள்ளமை எமக்கு பெரு மனவேதனையைத் தருகின்றது.

ஆனாலும் மீண்டும் இப்பகுதியின் அதிகாரத்தை எமது கரங்களுக்கு இப்பிரதேச மக்களாகிய நீங்கள் தந்துள்ளமையானது உங்களின் பகுதியினது கல்வியை மட்டுமல்லாது மக்களின் வாழ்வியலிலும் சிறப்பான அபிவிருத்திகளை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பத்தை உருவாக்கியுள்ளீர்ள்.

அந்தவகையில் இந்த முன்பள்ளியின் கோரிக்கையான சிறுவர் பூங்கா வேண்டும் என்ற கோரிக்கையானது காலக்கிரமத்தில் பூர்த்திசெய்து இச்சிறார்களின் கல்வித்தரத்துடன் விளையாட்டு துறைசார் ஆரோக்கிய நலத்திட்டங்களையும் ஊக்கிவிப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் என்றார்.

இச்செய்தியானது எமது செய்திப்பிரிவின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்பட்டவை