நாளை இடம்பெறும் அமைச்சரவை கூட்டத்தை புறக்கணிப்பதற்கு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று இரவு நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தேசிய அரசாங்கத்தில் தொடர்ந்தும் பயணிப்பதா என்பது குறித்து இறுதி முடிவு எடுப்பதற்கு நாளை மறுதினம் மீண்டும் மத்திய செயற்குழுவை கூட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்றைய கூட்டத்தின் போது, பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் பதவிகளில் இருந்து வெளியேற அனுமதிக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த 16 பேரும் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமரப்பபோவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், தற்போது அமைச்சரவையை புறக்கணிப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.
இந்நிலையில், தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் பயணிப்பது கேள்விக்குறியாகியுள்ளதாக அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.