நிலவி வரும் சீரற்ற காலநிலை தொடர்ந்து வரும் நிலையில், கொழும்பில் தற்போது அடை மழை பெய்து வருகின்றது.
கொழும்பின் பல பாகங்களிலும் பெய்து வரும் மழையின் காரணமாக மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதுடன், பயணங்களை மேற்கொள்வோர் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், வாகன சாரதிகள் பெரும் சிக்கல் நிலைமையை எதிர்நோக்கியிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
மேலும், கொழும்பு ஆமர் வீதி, கொட்டாஞ்சேனை ஆகிய வீதிகளில் வெள்ள நீர் நிரம்பி வழிவதையும் அவதானிக்க முடிகின்றது.
இதேவேளை, வாகன சாரதிகள், பாதசாரிகள், பொதுமக்கள் என அனைவரும் அவதானமாக செயற்படுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.