Monday, May 21, 2018

How Lanka

மே18 முள்ளி நினைவுகூரலில் நடந்த நெகிழ்சி சம்பவங்கள்

  • வீடு கட்ட பணம் இல்லாது நின்ற ஆச்சிக்கு நானும் உனக்கு ஒரு மகன் தான் என கூறி பணம் கொடுத்து உதவி முத்தமிட்ட தமிழ்மகன்
 வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனின் முயற்சியினால் 

போரில் பிள்ளைகளை இழந்து  வீடுவாசலை இழந்து முள்ளிவாய்க்கால் நினைவுகூரலில் வீடுகட்ட பணம் இல்லையே எனக்கூறி அழுத மூதாட்டிக்கு அவரது நண்பரின் உதவியினால் வீடுகட்ட பணம் கொடுத்து உதவி செய்துள்ளார்.

அத்துடன் நானும் உனக்கு ஒரு மகன் தான் என கூறி  முத்தமிட்ட தமிழ்மகன்.
இதற்கு உதவிசெய்த வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனுக்கு தனது நன்றியையும் அம் மூதாட்டி தெரிவித்திருந்தார்.
  •  காக்கா அண்ணனின் மௌனவிரதம்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான “காக்கா அண்ணன்” மௌன விரதம் மேற்கொண்டார் இச் சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது குறிப்பிடத் தக்கது.

நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட காக்கா அண்ணன் மே,18, மற்றும் நவம்பர் 27 ஆகிய நாட்கள் மௌனவிரதத்திற்கு உரிய நாள் என தனது பதிவேட்டில் எழுதியிருந்தார்.

“தமிழனின் குரல் மௌனிக்கப்பட்ட நாள் இன்று எங்களை நிம்மதியாக அழவிடுங்கள் என்று விடும் கோரிக்கை பரிகசிப்படும் போது நாம் என்ன செய்வது” என்று எழுதிய குறிப்பு ஒன்றையும் கையில் ஏந்தியவாறு மௌன விரதத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காக்கா அண்ணன் விடுதலைப் புலிகளின் மூத்த போராளி என்பதோடு, ஒரு மாவீரரின் தந்தை என்பதோடு, ஒரு மகனை முள்ளிவாய்க்காலில் இழந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


முள்ளிவாய்க்கால் யார் செய்வது என அடிபட்டுக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் இப்படியான உயர்வான உயர்வான மனிதர்கள் வாழ்வது பலருக்கு எடுத்துக் காட்டு என்பதுடன் உயிர்களைப் பிரிந்த உறவுகளுக்கு இப்படி நல்ல உள்ளங்கள் ஓரளவு ஆறுதலாகும் என பாதிக்கப் பட்ட மக்கள் கூறுகின்றனர்.

நாம் இன்று முகநூலில் வந்துநின்று வீரம் பேசுபவர்கள் அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். இம்முறை முள்ளிவாய்க்கால் நிகழ்வை நான் செய்வதா, நீ செய்வதா என்ற சண்டைகள் ஆரம்பித்த போது அதை சமரசமாக தீர்க்க அழுது தீர்க்கும் இடத்தை அரசியல் மேடையாக்காதீர்கள் என்று கண்ணீர் மல்க எல்லோரிடமும் கோரினார் காக்கா அண்ணா.

அத்துடன் நிற்காமல் இந்த வயதிலும் முள்ளிவாய்க்கால் மே - 18 நிகழ்வுக்காக முதல் நாளே அங்கு போய் நின்று எல்லா வேலைகளையும் ஏற்பாடுகளையும் உடனிருந்து செய்துவிட்டு 18 ஆம் திகதி வழமை போன்று மெளன விரதம் இருந்தார்.

பசீர் காக்கா புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினர் தேசியத்தலைவர் பிரபாகரனின் நெருங்கிய சகா ஆரம்பகாலங்களில் இருவரும் ஒரே சைக்கிளில் பயணித்து புலிகள் அமைப்பை கட்டமைக்க பாடுபட்டவர்கள்.

ஒரே தட்டில் உணவுண்டவர்கள். காக்கா அண்ண போராளியாக இருந்த காலத்தில் பல்வேறு சண்டைகளில் பங்குபற்றிய களமுனை போராளி. அத்துடன் ஒரு மாவீரரின் தந்தை, ஒரு பிள்ளையை முள்ளிவாய்க்காலில் பறிகொடுத்தவர்.