இந்த வருடத்திற்கான தேசிய கணித ஒலிம்பியாட் போட்டியில் 45 மாணவர்கள் தெரிவாகியுள்ளனர் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 9 மாகாணங்களிலுமிருந்து கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற தேசிய மட்டப்பரீட்சைக்குத்தோற்றிய மாணவர்களிலும் முன்னைய பரீட்சார்த்திகளிலிருந்தும் இந்த 45மாணவர் தெரிவாகியுள்ளனர்.
நேற்றுமுன்தினம் இப்பரீட்சை பெறுபெறுகள் வெளியாகியிருந்தன. மூவின மாணவர்களும் உள்ளடங்கும் இப்பரீட்சையில் சித்திபெற்ற 45மாணவர்களும் தேசியமட்ட பயிற்சி முகாமிற்குத் தெரிவாகியுள்ளனர்.
இவர்களில் 23மாணவர்கள் வடக்கு கிழக்கைச் சேர்ந்தவர்களாவர். அவர்களுள் திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியைச் சேர்ந்த 6 மாணவர்கள் தனியொரு பாடசாலையில் தெரிவாகி சாதனை படைத்துள்ளனர்.
அத்துடன், தேசிய மட்டத்தில் 58புள்ளிகளைப்பெற்று முதல் நிலையில் கொழும்பு றோயல்கல்லூரி மாணவன் லூசித டயஸ் பத்திரணவும் 56புள்ளிகளைப்பெற்று இரண்டாம் நிலையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி இந்திரன் றதுஷாவும் 52புள்ளிகளைப்பெற்று கொழும்பு ஆனந்தாக்கல்லூரி மாணவன் ரி.பி.விதானகேயும் சாதனை படைத்துள்ளனர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 23மாணவர் தெரிவாகியுள்ளனர். இவர்களுள் வடக்கில் 11பேரும் கிழக்கில் 12பேரும் உள்டங்குகின்றன்றனர். மொத்தமாக தெரிவாகியுள்ள 23பேரில் 21பேர் தமிழ் மாணவர்களாகவும் 2மாணவர் முஸ்லிம் மாணவர்களாகவுமுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வடக்கு கிழக்கில் தனியொரு பாடசாலையில் அதிகூடிய அதாவது 6மாணவர்கள் தெரிவாகியுள்ளமை திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியிலாகும்.
அதற்கடுத்ததாக 3மாணவிகள் தெரிவாகியிருப்பது திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியிலாகும்.
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி இந்திரன் றதுஷா, கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தெய்வேந்திரன் திருக்குமாரன், வவுனியா தமிழ் மகாவித்தியாலய மாணவன் பரமநாதன் நிஜசன், பருத்தித்துறை மெ.மி.பெண்கள் கல்லூரி மாணவி உதயகுமாரன் கீர்த்தனி,
பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி மாணவன் அருணகாந்தன் விஸ்வகாந்தன், யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவன் செல்வமகேசன் கலாபன், வவுனியா றம்பைக்குளம் பெண்கள் உயர்கல்லூரி மாணவிகளான ஹரிணி பிரதீபன் பரந்தாபன் ஹரிணி, அளவெட்டி அருணோதய கல்லூரி மாணவன் ஆர்.டசோதன், கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் கே.கிருசாந்த், கிளிநொச்சி மத்தியகல்லூரி மாணவன் தெய்வேந்திரன் திருக்குமாரன் ஆகியோருக்கு போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது.
திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மாணவர்களான என்.சயநுதன், யு.லிதுர்சன், வை.மிதுலாசன், யு.கோசிகன், யு.திபுசன், ரி.ராகுல் திருகோணமலை சண்முகா இந்து மகளிர் வித்தியாலய மாணவிகளான எஸ்.சந்தியா, எஸ்.தீபிகா, கே.தர்சனா மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் எஸ்.றுகேசன் கிண்ணியா மத்திய கல்லூரி மாணவன் எம்.என்.அம்ஹர், மட்டு.மத்தி மெத்தைப்பள்ளி வித்தியலாய மாணவன் கே.எல்.மொகமட் அன்பாஸ் ஆகியோருக்கும் சர்வதேச வெளிநாட்டு போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.