கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து தேவைப்பாடுகளையும் மேற்கொண்டு எமது வேலணைப் பிரதேச கடற்றொழிலாளர்களது வாழ்வியல் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேலணைப் பிரதேச சபை தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் குறித்த பிரதேச நிர்வாக செயலாளருமான நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வேலணைப் பிரதேச கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண்பதற்காக குறித்த பிரதேச கடற்றொழிலாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று தவிசாளர் நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது. இதில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் -
எமது பிரதேசத்தின் மக்களது வாழ்வாதாரத்தில் பெரும் பங்கினை வகிக்கும் தொழிலாக கடற்தொழிலும் முதன்மை பெறுகின்றது. இந்த தொழிலை நம்பி வாழும் மக்களது வாழ்வாதாரம் தொடர்பில் அதிக அக்கறை செலுத்தப்படவேண்டியது அவசியமானது.
கடந்த காலத்தில் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்தபோது தீவகத்தின் கடற் தொழில்துறைக்கு குறிப்பாக வேலணை பிரதேச கடற்றொழில்துறைக்கு பல்வேறுவகையான தொழில்துறை உதவித்திட்டங்களை பெற்றுக்கொடுத்து இம் மக்களது வாழ்வாதாரத்தை முடியுமானளவு முன்னேற்றம் காணச் செய்திருந்தார்.
அந்தவகையில் அதன் தொடர்ச்சியாக தற்போது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக கடல் அட்டை வளர்ப்பு திட்டத்தை செயற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கான கோரிக்கையினை குறித்த பிரதிநிதிகள் முன்வைத்திருந்தனர். குறித்த கோரிக்கையின் பிரகாரம் கடலட்டை வளர்ப்பதற்கான திட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்புகளையும் அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார்.