பிரித்தானிய அரச குடும்பம் தொடர்பில் அவுஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பெண்ணியவாதி ஒருவர் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய இளவரசர் ஹரிக்கு திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் ஹரியின் திருமண வாழ்க்கை ஐந்து வருடத்திற்கு பிறகு முறிந்து விடும் என, அவுஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பெண்ணியவாதி Germaine Greer ஆருடம் கூறியுள்ளார்.
எதிர்வரும் 19ம் திகதி இளவரசர் ஹரி - மெர்க்கல் திருமணம் Windsor Castle - இல் நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில் இவர்களது திருமண வாழ்க்கை குறித்து அவுஸ்திரேலிய பெண்ணியவாதி, Germaine Greer தொலைக்காட்சி ஒன்றில் கலந்துகொண்டு கூறியதாவது, மெர்க்கலுக்கு அரச குடும்பத்து வாழ்க்கை காலம் செல்ல பிடிக்காமல் போய்விடும்.
திருமணமாகி 5 வருடங்களுக்கு பின்னர் அவர் ஹரியை விட்டு பிரிந்து சென்றுவிடுவார். அதுமட்டுமின்றி அரச குடும்பத்துக்கும், அவர் அணியும் ஆடைகளுக்கும் சற்றே பொருத்தமில்லாமல் இருக்கிறது.
கடந்த ஆண்டு அரச குடும்பத்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது, மெர்க்கல் அணிந்திருந்த பழுப்பு நிற கோட், அவரது மோசமான ஆடை தெரிவை வெளிப்படுத்துகிறது.
அதுமட்டுமின்றி, நடிகையாக இருக்கும் மெர்க்கல் ஹரியை திருமணம் செய்துகொள்வதற்காக, தனது தொழில், அமெரிக்க நண்பர்கள், தனது சுதந்திரம் என அனைத்தையும் விட்டுக்கொடுத்து பிரித்தானியாவுக்கு சென்றுள்ளார்.
இப்படி, இவர் விட்டுக்கொடுத்துள்ளதால் இந்த பந்தம் திருமணம் வரை சென்றுள்ளது. ஆனால் திருமணத்திற்கு பிறகு, மெர்க்கல் ஒரே மனநிலையில் இருந்தால் பரவாயில்லை, ஆனால் அரச குடும்பத்து வாழ்க்கை அவருக்கு சலிப்பை ஏற்படுத்திவிட்டால் அவர் அங்கிருந்து வெளியேற நேரிடும்.
இதற்கு உதாரணம், இளவரசர் ஹரியின் அம்மா டயானா. சாதாரண குடும்பத்தை சேர்ந்த டயானாவுக்கு அரச குடும்பத்து வாழ்க்கை பிடிக்கவில்லை. ஒரு இளவரசியாக அவர் பட்ட துயரங்கள் காரணமாகத்தான் அவர் அந்த வாழ்க்கையில் இருந்து வெளியேறினார்.
இது இளவரசர் ஹரிக்கும் தெரிந்திருக்கும் என்பதால் தனது வருங்கால மனைவி மெர்க்கலுக்கு சிறந்த வாழ்க்கையை அவர் அமைத்து கொடுக்க வேண்டும் என கூறியள்ளார்.
அரச குடும்பத்தில் நடக்கும் திருமணத்தை பார்க்க பிரித்தானிய மக்கள் பெரும் ஆவலாக உள்ளனர்.
இந்நிலையில் அவுஸ்திரேலிய பெண்மணியின் கணிப்பானது பலரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.