பேரூந்துக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பின் காரணமாக பேரூந்துக் கட்டணத்தை அதிகரிக்குமாறு தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆரம்பக் கட்டணம் பத்து ரூபாவிலிருந்து 15 வரையும் அதிகரிக்கப்படுவதுடன், ஏனைய கட்டணங்கள் 20 வீதத்தினால் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது பேரூந்து உரிமையாளர்களின் கோரிக்கையாகும்
எதிர்வரும் 16ம் திகதிக்குள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது போனால் தொடர் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
எனினும் இது தொடர்பாக அமைச்சரவையில் கலந்தாலோசித்து தீர்மானமொன்றை மேற்கொள்ளும் வரை பொறுமையாக இருக்குமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பேரூந்து உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.