Sunday, May 13, 2018

How Lanka

சிங்கப்பூருடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் கலாச்சார சீரழிவினை ஏற்படுத்தும் - முன்னாள் ஜனாதிபதி

சிங்கப்பூருடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் கலாச்சார சீரழிவினை ஏற்படுத்தும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்...

அரசாங்கம் எந்தவொரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தாது எதேச்சாதிகாரமாக தீர்மானங்களை எடுக்கின்றது.

எனவே வேறு வழியின்றியே நாம் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க நேரிட்டுள்ளது.

இங்குள்ள தொழில் வாய்ப்புக்களை சிங்கப்பூருக்கு வழங்கி, மேலும் கலாச்சார ரீதியிலும் அழிவானது.

இலங்கையர் ஒருவருக்கு தற்காலிகமாக சிங்கப்பூர் பெண் ஒருவரை அழைத்து வந்து வைத்துக் கொள்ள வேண்டுமாயின் அதற்கு அனுமதி வழங்கும் வகையில் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்கு எதிராக நாம் கருத்து வெளியிடவில்லை, இந்த ஒப்பந்தம் பிழையானது என்பதே எமது நிலைப்பாடு.

அண்மையில் அரசாங்கத்தை விட்டு வெளியேறிய 16 பேரும் அரசாங்கத்திற்கு எதிராகவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராகவும் செயற்படுகின்றனர். அவர்கள் எம்முடன் இணைந்து கொள்வார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.