இலங்கையின் புதிய வரைபடம் மறுசீரமைக்கப்பட்டு தற்பொழுது வெயிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கான புதிய வரைபடத்தின் 2 ஆவது பதிப்பிற்கான வெளியீட்டு நிகழ்வு இன்று இலங்கை நில அளவை திணைக்களத்தில் இடம்பெற்றது.
வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய வரைபடத்தில் 1:500 எனும் விகிதத்திலே இலங்கைக்கான புதிய வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. துறைமுகநகரம், அம்பாந்தோட்டை துறைமுகம், மொஹரகந்த நீர்த்தேக்கம் மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான கட்டமைப்பு ஆகியன இணைக்கப்பட்டுள்ளன.
துறைமுகநகரமானது காலிமுகத்திடலிலிருந்து 269 ஹெக்டயர் நிலப்பரப்பினை மேலதிக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நில அளவைத் திணைக்கள பணிப்பாளர் பி.எம்.பி உதயகாந்த தெரிவிக்கையில்,
இலங்கையின் இடப்பரப்பானது தொடர்ச்சியாக மாற்றங்களுக்குட்பட்டுவருகின்றது. இலங்கையில் பாரிய கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த வண்முள்ளமையால் இன்னும் சில வருடங்களில் இலங்கை வரைபடத்திற்கு மேலும் மாற்றங்கள் ஏற்படும் என்றார்.
இந்நிகழ்வில் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க, நில அளவை திணைக்கள பணிப்பாளர் பி.எம்.பி உதயகாந்த மற்றும் நில அளவை திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.