சர்வதேச மட்டத்திலான கொள்கலன் துறைமுகங்களின் தரப்படுத்தல் வரிசையில் இலங்கை சிங்கப்பூருக்கு அருகில் வந்துள்ளது.
இந்த பட்டியலில் சிங்கப்பூர் துறைமுகம் 16.5 சதவீத வளர்ச்சியுடன் முதலாவது இடத்தை பெற்றுள்ளது.
இதேவேளை, 12.6 சதவீத வளர்ச்சியுடன் கொழும்பு துறைமுகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
சீனாவின் சியாமென் துறைமுகம் மூன்றாவது இடத்தையும், ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தின் என்ட்வீப் துறைமுகம் நான்காம் இடத்தை பெற்றுள்ளது.
Abhaliner global port நிறுவனத்தின் தரப்படுத்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உலக துறைமுக வகைப்படுத்தலின் கீழ் கொழும்பு துறைமுகத்திற்கு 23 வது இடம் கிடைத்துள்ளது.
கடந்த வருடம் கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் செயல்பாடுகள் 6.2 மில்லியன் கடந்துள்ளதாகவும் இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.