Thursday, May 10, 2018

How Lanka

வவுனியாவில் எரிபொருள் பதுக்கல் - வாகனங்களுடன் முற்றுகையிட்ட பொதுமக்கள்

வவுனியா வேப்பங்குளம் 8ம் ஒழுங்கைக்கு அருகே காணப்படும் எரிபொருள் நிரப்பும் நிலையத்தினை பொதுமக்கள் முற்றுகையிட்டமையினால் அந்த பகுதியில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.


இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோலின் புதிய விலை 137 ரூபாவாகும்.

ஒக்டே 95 ரக பெற்றோலின் விலையும் 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 148 ரூபாவாகும். லங்கா ஒட்டோ டீசலின் விலை 14 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. சுப்பர் டீசலின் விலை 9 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்து.


ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்யின் விலை 57 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை திருத்தத்திற்கு அமைய மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை புதிய விலை 101 ரூபாவாக அமைந்துள்ளது.

இதனையடுத்து குறித்த எரிபொருள் நிலையத்தில் 50க்கு மேற்பட்ட வாகனங்கள் தரித்து நின்ற சமயத்தில் எரிபொருள் தீர்ந்து விட்டதாக தெரிவித்தமையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி தலமையிலான குழுவினரால் தீர்வு காணப்பட்டு எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டது.