Tuesday, May 22, 2018

How Lanka

பொலிஸாரின் உத்தரவை மீறி சென்ற நபர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்

சிலாபம் - கொழும்பு வீதியின் மாதம்பே பிரதேசத்தில் நபர் ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார்.

குறித்த பகுதி ஊடாக பயணிக்க வேண்டாம் என பொலிஸார் வழங்கிய ஆலோசனையை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே இவ்வாறு நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.

பின்னர் அந்த இடத்தில் இருந்த மாதம்பே பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இளைஞர்கள் சிலர் இணைந்து நீரில் அடித்து செல்லப்பட்ட நபரை காப்பாற்றியுள்ளனர்.


எப்படியிருப்பினும் அவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளை கண்டுபிடிக்க பிடிக்க முடியாமல் போயுள்ளது.