கூட்டாட்சி மீது மக்கள் கடும் வெறுப்படைந்துள்ளனர். விலைவாசி அதிகரிப்பு மற்றும் வரவு செலவுத்திட்டத்தில் கூறியவற்றை அமுல்படுத்தாமை, வரி விதிப்பு போன்ற பல காரணங்களால் மக்கள் மத்தியில் கூட்டரசாங்கம் மீது கடும் அதிர்ப்தியும் வெறுப்பும் ஏற்பட்டுள்ளது.
காரணங்களை பார்போம்:-
- வரவு செலவுத்திட்டத்தில் தொலைபேசி மற்றும் இணைய இணைப்பின் மீதான வரி முழுமையாக நீக்கப்படும் என மங்கள சமரவீர குறிப்பிட்டிருந்தார் ஆனால் இன்று வரை அது அமுல்படுத்தபடவில்லை அத்துடன் 50% வரியை மக்கள் செலுத்துகின்றனர்.
- மோட்டார் வாகன கொள்வனவில் வாகத்தின் விலையைவிட இருமடங்கான வரி செலுத்தும் நிலை அதாவது 200% வரி.
- மக்களிடையே கடும் வரி அறவிடல் , விலைவாசிகளை அதிகரித்துவிட்டு ஆடம்பர கார்களில் திரியும் அமைச்சர்கள்
- சம்பள உயர்வு என கூறியும் அவற்றை பல காலமாக அமுல்படுத்தாமை
- கடந்த கால ஆட்சியில் கொள்ளையடித்தவர்களை இன்னும் கைது செய்யாமை
- மற்றும் நேற்யைதினம் விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் விதமாக எரிபொருள் - மண்ணெய் விலையை 101 ரூபாவாக அதிகரித்தமை
- பெற்றோல் உட்பட ஏனைய எரிபொருட்களின் விலையை அதிகரித்தமை
- போதைப்பொருட்களை கட்டுப்படுத்த முடியாமை.
நாங்கள் கஸ்டப்பட்டு உழைக்கும் பணத்தில் வரி அறவிடுகிறீர்கள். போதாக்குறைக்கு தற்சமையம் மண்ணெய் முதல் எரிபொருட்களின் விலையையும் அதிகரித்து விட்டீர்கள். இது என்ன நாடா இல்லை வேறு ஏதாவதா என்று மக்கள் கடும் விரக்தி மற்றும் வெறுப்படைந்துள்ளனர்.